...பல்சுவை பக்கம்!

.

Saturday, March 9, 2024

ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் - ஐந்து தொகுதிகள் (188)


ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் - 5 தொகுதிகள்! (188)




பிரபல எழுத்தாளரும் அன்பு நண்பருமாகிய சீர்காழி திரு. ஜூனியர் தேஜ் அவர்கள், தான் பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் எழுதிய சிறுகதைகளை 5 தொகுதிகளாக புஸ்த்தகா நிறுவனம் மூலமாக வெளியிட்டுள்ளார்கள்!

முதல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எனது வாழ்த்துரையை இங்கே வழங்குகிறேன்!


.

.

.

வாழ்த்துரை!

 'ஜூனியர் தேஜ்' என்று பரவலாக அறியப்படுகின்ற அன்பர் திரு. வரதராஜன் அவர்கள், ஓவிய ஆசிரியர் மட்டுமல்ல; மனநல ஆலோசகரும் கதாசிரியரும் ஆவார்.

ஆகவே அவருடைய கதைகளில் சமூக  முக்கியமான பிரச்சனைகளும் இருக்கும். அதனுடைய தீர்வுகளும் இருக்கும்.

ஆசிரியர் அவர்களுடைய  சிறுகதைகள் பலவற்றை முன்பே நான் அவருடைய வலைப்பூவில் படித்து விட்டேன்.
(நானும் ஒரு வலைப்பூ  வைத்துள்ளேன்.)  
இப்போது அவர்  அனுப்பிய போது(ம்) மறுபடியும் அனைத்து கதைகளையும் படித்தேன்.

 தொழிலதிபர் சோப்ராவிடம் அந்த வயது முதிர்ந்த முதியவர் கேள்விகள் கேட்டு, எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, காட்டும் வழிகாட்டல் நல்லதொரு உத்தி! ('பூமி இழந்திடேல்' சிறுகதை)

 இரசாயன முறையில் விவசாயம் செய்வதால் மண்ணின் இயற்கை தன்மை அழிகிறது. இயற்கை விவசாயம் செய்யும் டாக்டர் மார்த்தாண்டம் அவர்களைப் பார்த்து, சாயாவனம் ஒருவனாவது ஒலி மாசுவை குறைப்பதற்காக ஒலிபெருக்கிகளை தவிர்ப்பது நல்லதொரு ஆரம்பம். பூமி பாதுகாக்கப்பட்டால் மக்களும் நலவாழ்வு வாழ்வார்கள்! ('கற்றது ஒழுகு' சிறுகதை.)

 சில சமயங்களில் ஜாதியை அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகும் கணவான்கள், சில சமயங்களில் அதை எதிர்ப்பது ஏன்? இதுதான் மகேஷுக்கு குழப்பம்!
ஆனால் தங்களுக்கு ஏற்படுகின்ற சந்தர்ப்ப, சூழ்நிலைகளால் தாங்கள் விரும்பும் முடிவை எடுக்கின்றனர் மக்கள் என்பதை அவன் பெரியவனானதும் உணர்ந்து கொள்வான்.
('ஜாதின்னா என்ன?' சிறுகதை.)

 'குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்! குழந்தை தொழிலாளர்களை மீட்போம்!!' என்று வீர வசனம் பேசி  சிறப்புரைகள், மாநாடுகள், போராட்டங்கள் நடத்தும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்  தங்கள் வீடுகளிலேயே அதை ஊக்குவிப்பதுதான் மகா கொடுமை! இவர்களெல்லாம் 'வாய்ச் சொல்லில் வீரனடி' இரகம்தான்! ('பயிற்சிப் பட்டறை' சிறுகதை.)

 இப்படியாக அனைத்து கதைகளையுமே பாராட்டிக் கொண்டே சென்றால் தனியாக புத்தகம் போட வேண்டி வரும்.

ஆசிரியர் அவர்களின் கதைகளில் 'வளவள' என்று அதிகபட்ச இழுவையான வார்த்தைகள் இருக்காது. ஆனால் கதைக்குத் தேவையான நுணுக்கமான விவரங்களையும் அங்கங்கே இடை இடையே அமைத்திருப்பார்; வியப்பாக இருக்கும்!

ஆசிரியர் அவர்களின் இந்த சிறுகதை தொகுதி வெளிவர வாழ்த்துகள் வழங்குவதோடு, அடுத்தடுத்து தொகுதிகள் வெளிவரவும் கட்டுரைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் வெளிக்கொண்டு வரவும் முன்கூட்டியே என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

விகடன் இணையதளத்தில் வெளிவந்த பிரம்மாண்டமான புதினமான 'கலியன் மதவு' என்ற புதினத்தையும் ஆசிரியர் அவர்கள் விரைவில் வெளியிட ஆவன செய்ய எனது வாழ்த்துகளையும் தெரிவித்து, வாழ்த்துரை வழங்கிட வாய்ப்பு வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன்!  

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
பேங்காக்,
01/01/2024.



புஸ்தகா நிறுவனத்தை தொடர்புகொள்ள:


மற்ற தொகுதிகளின் அட்டைப்படங்கள்:


.


 .

.




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

நகைச்சுவை! இரசித்தவை!!#25 (187)

நகைச்சுவை! இரசித்தவை!! #25





























. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

நகைச்சுவை! இரசித்தவை!#24 (186)!


நகைச்சுவை! இரசித்தவை!! #24
























. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Related Posts Plugin for WordPress, Blogger...